உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராமாபுரத்தில் மனுநீதி நாள்

ராமாபுரத்தில் மனுநீதி நாள்

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ராமாபுரத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.கடலூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) கேசவமூர்த்தி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். முகாமில் பஸ் வசதி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் வழங்கிய 125 மனுக்கள் பெறப்பட்டது.முன்னதாக கடந்த 7ம் தேதி பெறப்பட்ட 45 மனுக்களில் 11 மனுக்கள் மீது தீர்வு மேற்கொள்ளப்பட்டு பட்டா மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. காட்டுமன்னார்கோயில் தாசில்தார் விஸ்வநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் தில்லை கோவிந்தன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் சந்திரா, வட்ட வழங்கல் அலுவலர் சரவணன், நில அளவை அலுவலர் ஷாஜகான், வேளாண்துறை அலுவலர்கள், ஸ்ரீமுஷ்ணம் வருவாய் ஆய்வாளர் சுந்தரம், வி.ஏ.ஓ.,க்கள் குமாரமோகன், மயில் வாகனன், கொளஞ்சிநாதன், மணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை