| ADDED : செப் 23, 2011 02:12 AM
சிதம்பரம்:கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பஸ்சில் சென்ற நகை
வியாபாரியிடம் வழிப்பறி செய்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை
போலீசார் பறிமுதல் செய்தனர்.விழுப்புரத்தைச் சேர்ந்தவர முருகேசன். இவர்
சிதம்பரம், கடலூர் பகுதியில் உள்ள நகை கடைகளுக்கு தங்க நகைகøளை ஆர்டரின்
பேரில் செய்து கொடுத்து வந்தார். இவர் கடந்த மே மாதம் 5ம் தேதி
விழுப்புரத்திலிருந்து சிதம்பரத்திற்கு வந்து, வழக்கம் போல் தங்க நகைகளை
சிதம்பரத்தில் உள்ள கடைகளில் கொடுத்துள்ளார். பின்னர் வசூல் பணம் 2.50
லட்சம் ரூபாய் மற்றும் 400 கிராம தங்க நகைகளுடன் மீண்டும்
விழுப்புரத்திற்கு அரசு பஸ்சில் சென்றுகொண்டிருந்தார்.பஸ் புதுச்சத்திரம்
அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பயங்கர ஆயுதங்களை
காட்டி பஸ்சை நிறுத்தி, முருகேசன் வைத்திருந்திந்த நகை மற்றும் பணத்தை
பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இச்சம்பவம் குறித்து முருகேசன் கொடுத்த
புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து
குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்நிலையில் சிதம்பரத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற
ஏ.எஸ்.பி.,துரை தலைமையில் ஒரு தனிப்படையும், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி,
திருமால் ஆகியோர் தலைமையில் தலா ஒரு தனிப்படை என 3 தனிப்படைகள்
அமைக்கப்பட்டு வழிப்பறி குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் தனிப்படை
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுச்சத்திரம் பகுதியில்
வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இதில் அந்த வழியாக சந்தேகப்படும்படியா வந்த டாடா சுமோ காரை நிறுத்தி அதில்
இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர். இதில் இவர்கள் நகை வியாபாரி
முருகேசனிடம் வழிப்பறி செய்ததை ஒப்பு கொண்டனர். மேலும் விசாரணையில்
சிதம்பரத்தைச் சேர்ந்த முகமது ஜர்ஜீஸ் ,39, சீர்காழி பார்த்தீபன், 24.
சிதம்பரம் விஜய் என்ற விஜய்ராஜ்,31, சிவக்குமார்,32, சீர்காழி அடுத்த
மாதானத்தைச் சேர்ந்த மணிகண்டன்,27 ஆகியோர் என தெரியவந்தது.இதில்
சிதம்பரத்தில் டிராவல்ஸ் நடத்தி வரும் முகமது ஜர்ஜீஸ்சின் காரில் இவர்கள்
தப்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக
மேலும் மூன்று பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் கொடுத்த
தகவலின் பேரில் 200 கிராம் தங்கம், 1.75 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம்
ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.