கடலுார் ரயில் விபத்து அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆறுதல்
கடலுார் : கடலுார் அருகே ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை அய்யப்பன் எம்.எல்.ஏ., சந்தித்து ஆறுதல் கூறினார்.கடலுார் அடுத்த செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் இறந்தனர். ஒரு மாணவர் மற்றும் வேன் டிரைவர் காயமடைந்தனர். விபத்து நடந்த இடத்தை மீட்பு பணியில் ஈடுபடச் சென்றவர் மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.காயமடைந்த 3 பேரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை அய்யப்பன் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார்.காயமடைந்தவர்களின் உறவினர்களிடம், உயர்தர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.மேலும், விபத்து குறித்தும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.