உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்தவர் இறப்பு

மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்தவர் இறப்பு

சிதம்பரம்: சிதம்பரம், அண்ணாமலை நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குப்பன் மகன் சங்கர், 47; கூலி தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் வழக்கம் இருந்ததை, மனைவி கற்பகவல்லி கண்டித்தால், மூன்று ஆண்டுகளாக மது குடிக்காமல் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 5ம் தேதி, சங்கர் மது அருந்திவிட்டு, வீட்டுக்கு வந்துள்ளார். இதனை தட்டி கேட்ட மனைவியிடம், நான் மதுவில், பூச்சி மருந்து கலந்து குடித்ததாக கூறியுள்ளார். உடன், மாவட்டம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சங்கர் இறந்தார்.அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை