மாவட்ட சதுரங்க போட்டி பரிசளிப்பு விழா
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கந்தன் பாளையம் ஸ்ரீ லட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் ஸ்ரீ பாண்டுரங்கா தொண்டு நிறுவனம், மாவட்ட சதுரங்க சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. போட்டியில் மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பண்ருட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கணேசன், தொழிலதிபர்கள் தாமோதரன், விஜயரங்கன், கோவிந்தராஜ், பண்ருட்டி எக்ஸ்னோரா தலைவர் பசுபதி, வழக்கறிஞர் சக்திவேல், குமாரசாமி இண்டஸ்ட்ரீஸ் கார்த்திக் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை பாண்டுரங்கா தொண்டு நிறுவன தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் லட்சுமி கிருஷ்ணா செய்திருந்தனர். மாவட்ட சதுரங்க சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமையிலான நடுவர் குழு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கினர்.