மேலும் செய்திகள்
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
05-Jul-2025
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை நடந்தது. லால்புரம் ஊராட்சி, மேல்சொக்கநாதன்பேட்டை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் மனோகர் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். கடலுார் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன், உறுப்பினர் சேர்க்கை பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து, கிளைச் செயலாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்களிடம் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அரவிந்தன், சஞ்சய், மகளிரணி தேவிகா, நிர்வாகிகள் மணிமாறன், புருஷோத், சந்துரு, வீரமணி, கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
05-Jul-2025