மின் மீட்டருக்கு பணம் கொடுக்க வேண்டாம் விருதை செயற்பொறியாளர் தகவல்
விருத்தாசலம் : வீடுகளில் மின் மீட்டர் பொருத்த மின் வாரிய ஊழியர்களிடம், பொதுமக்கள்பணம் கொடுக்க வேண்டாம் என விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:விருத்தாசலம் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகார்வோரின் பிரச்னைகள் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, பொதுமக்கள் புதிய மின் இணைப்பு பெற, இணையதளம் மூலம் விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில் மின்வாரிய ஊழியர்கள் அல்லது ஊழியர் அல்லாத வெளிநபர்கள், மின் மீட்டர் பொருத்தவோ அல்லது மின் பழுது நீக்கம் செய்யவோ பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம்.மின்வாரியம் மூலம் கட்டணம் வசூலிப்பதில்லை. தங்களுடைய மின் இணைப்பில் மின் வாரியத்தின் அனுமதி இல்லாமல் எவ்வித பராமரிப்பும்,பழுதும் மேற்கொள்ள வேண்டாம்.புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் செய்வதற்கு மற்றும் இதர மதிப்பீடு கட்டணங்கள் ஆகிய அனைத்தும் மின்வாரிய இணையதள கட்டணம் மூலம் மட்டுமே பணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, மின் நுகர்வோர் தனி நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.