உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பீர்பாட்டிலுடன் காரில் நகர்வலம்: வாலிபர்களுக்கு பாடம் கற்பித்த போலீசார் 

 பீர்பாட்டிலுடன் காரில் நகர்வலம்: வாலிபர்களுக்கு பாடம் கற்பித்த போலீசார் 

க டலுார்-கோண்டூர் சாலையில் நேற்று முன்தினம் கியா காரில் சன் ரூப்பை திறந்து வைத்துக்கொண்டு மேல் சட்டை போடாமல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூச்சல் போட்டுக்கொண்டு வாலிபர்கள் செல்வதை சிலர் மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இது குறித்து எஸ்.பி., ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்களை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் எஸ்.ஐ., பிரசன்னா மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து சென்று கோண்டூர் அருகே காரை மடக்கி பிடித்து புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள், விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் சத்திய மூர்த்தி 36; வில்லியனுார் கன்னிகுளம், வசந்த் 37; ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் மீது குடிபோதையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டுதல் உள்ளிட்ட, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவர்கள் 'நாங்கள் குடிபோதையில் தவறு செய்துவிட்டோம். இனி யாரும் எங்களை போல் தவறு செய்யக்கூடாது. இதற்காக போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,' என்று பேசும் ஆடியோ மீண்டும் சமூக வலைதளத்தில் வைரலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை