உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதைப்பொருள் விழிப்புணர்வு

போதைப்பொருள் விழிப்புணர்வு

வடலூர்: வடலூர் அரசு கலை கல்லூரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது தமிழ்நாடு போதை பொருள் விழிப்புணர்வு சங்கம் சார்பில், வடலூர் அரசு கலை மற்றும், அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் வண்ணமுத்து வரவேற்றார். சங்க மாநில தலைவர் ராஜகுமார் தலைமை தாங்கினார். டாக்டர் பிரியதர்ஷன் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசினார். சங்க துணை பொது செயலாளர் சுந்தர்ராஜன், அமைப்பு செயலாளர் கஞ்சமலை நாராயணன் விழிப்புணர்வு உரையாற்றினர். ஊடக பிரிவு பொறுப்பாளர் பந்தளராஜன், அபினேஷ், ரீகன் உறுப்பினர் பதிவு தொடர்பாக விளக்கினர். நிகழ்வில், ஜெயவேல் குழுவினரின் போதைப்பொருள் விழிப்புணர்வு இசை நிகழ்ச்சி நடந்தது. போதை பொருள் விழிப்புணர்வு உறுதிமொழியை சங்க நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஏற்றனர். மாவட்ட பொறுப்பாளர்கள் சிவப்பிரகாஷ், அசோக்குமார், குருதேவன் ஒருங்கிணைத்தனர்.சங்க ஆலோசனை குழு பொறுப்பாளர் போஸ்கோ நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ