உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இணையவழி பட்டா மாற்றம்: பொதுமக்கள் பயன்பெறலாம்

இணையவழி பட்டா மாற்றம்: பொதுமக்கள் பயன்பெறலாம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டத்தில், விண்ணப்பித்து பயன்பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும், நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம் மூலம் விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படுகிறது. இ-சேவை மையங்கள் மற்றும் சிட்டிசன் போர்ட்டல் (https://tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இ-விண்ணப்பங்கள் அடிப்படையில் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு பட்டா வழங்கப்படும்.மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை (https://eservice.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தாலுக்காக்களில் இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போரட்டல் வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ