மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
20-Sep-2024
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த, சிந்தாமணிக்குப்பத்தை சேர்ந்தவர ராஜகோபால், 73; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கும் இடையே, நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இளங்கோவன், விக்னேஷ் ஆகிய இருவரும் முதியவர் ராஜகோபாலை இரும்பு கம்பியால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்த ராஜகோபால் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இதுகுறித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் இளங்கோவன், விக்னேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
20-Sep-2024