உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

விருத்தாசலம்: ஆசிரியர்களுக்கு நடந்த ஆங்கில பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விருத்தாசலம், அரசு ஆ ண்கள் மேல்நிலைப்பள்ளியில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர் களின் ஆங்கில உச்சரிப்பு திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி, கடந்த 6ம் தேதி துவங்கியது. இந்த பயிற்சியை, விருத்தாசலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி துவக்கி வைத்தார். விருத்தாசலம் வட்டார கல்வி அலுவலர் ஞானவல்லி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பழனிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பயிற்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் சிங்காரவேலு மற்றும் வடலுார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பழனி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். ஜாலி பொனிக்ஸ் குழு உறுப்பினர் அபர்ணா ஜெயராமன் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியை ஆசிரியர் பயிற்றுனர்கள் கனிமொழி, கவிதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்த பயிற்சியில் விருத்தாசலம், புவனகிரி, பண்ருட்டி, நல்லுார், மங்களூர், கம்மாபுரம் � முஷ்ணம் ஆகிய, 7 ஒன்றியங்களை சேர்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மொத்தம் மூன்று நாட்களுக்கு நடந்த முகாம், நேற்று நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ