உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முன்னாள் படைவீரர்கள் சங்க பொதுக் குழு கூட்டம்

முன்னாள் படைவீரர்கள் சங்க பொதுக் குழு கூட்டம்

கடலுார்: கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.கடலுாரில் நடந்த கூட்டத்திற்கு, ஓய்வுபெற்ற கர்னல் நாகராஜன் தலைமை தாங்கினார். ஸ்ரீராமுலு முன்னிலை வகித்தார். ஓய்வுபெற்ற சுபேதார் ஜெயராமன் வரவேற்றார். சங்க வரவு, செலவு அறிக்கையை சுப்பு சமர்ப்பித்தார்.சங்க செயலாளர் சவுந்தரராஜன் விளக்கவுரையாற்றினார். இதில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை 96 வயதுடையவர்களுக்கு முழு பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இணை செயலாளர் மதியழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி