உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண் கண்ணாடி : பா.ஜ., வழங்கல்

கண் கண்ணாடி : பா.ஜ., வழங்கல்

புவனகிரி: புவனகிரியில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பா.ஜ., சார்பில் புவனகிரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். இதில் 91 பயனாளிகள் கண் கண்ணாடிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் விழா புவனகிரியில் நடந்தது. ஒன்றிய தலைவர் லட்சுமி நரசிம்மன் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் திருமாவளவன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், முன்னாள் நிர்வாகி வெற்றிவேல், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் பழனியப்பன், திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் மாவட்ட துணை தலைவர் அர்ச்சனா ஈஸ்வர், பயனாளிகளுக்கு, கண் கண்ணாடி வழங்கினார். விழாவில், நிர்வாகிகள் ராகேஷ், அகத்தியர், விநாயகமூர்த்தி, பெருமாள், கோபிநாத், கணேசன், பாலு விக்னேஸ்வரன், சத்யா, உமாபதிசிவம் பங்கேற்றனர். விஜயகுமார் நன்றி கூறினார். முன்னதாக காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை