உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  செயின்ட் டேவிட் கோட்டை புனரமைப்பு முன்னாள் மருத்துவ அதிகாரி குடும்பத்தினர் பாராட்டு

 செயின்ட் டேவிட் கோட்டை புனரமைப்பு முன்னாள் மருத்துவ அதிகாரி குடும்பத்தினர் பாராட்டு

கடலுார்: கடலுார் செயின்ட் டேவிட் கோட்டையின் ஒரு அங்கமான டி.எம்.ஓ.,பங்களாவை புனரமைக்கும் முயற்சிக்காக, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை முன்னாள் மருத்துவஅதிகாரியின் குடும்பத்தினர் நேரில் பாராட்டினர். கடலுார் சில்வர் பீச் அருகில் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த செயின்ட் டேவிட் கோட்டை உள் ளது. கோட்டையின் ஒரு அங்கமான டி.எம்.ஓ.,பங்களா எனப்படும் மாவட்ட மருத்துவ அதிகாரியின் குடியிருப்பு உட்பட கோட்டையின் முக்கிய பகுதிகள் தமிழக அரசின் முயற்சியால் புனரமைக்கப்பட உள்ளது. பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருந்த தொன்மையான கட்டடத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்காக, அக்கட்டடத்தில் தங்கி பணிபுரிந்த முன்னாள் மாவட்ட மருத்துவ அதிகாரி கிருபாநிதியின் மகன்கள் டாக்டர் சீனுவாசராஜா, டாக்டர் கென்னடி பாபு, என்ஜினியர் உமாசந்திரன், காயத்ரி, டாக்டர் சாய்மிருணாளினி, டாக்டர் சாய்கிருபா ஆகியோர், கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமாரை நேரில் சந்தித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை