உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் மோதி விவசாயி பலி

ரயில் மோதி விவசாயி பலி

நெல்லிக்குப்பம் -நெல்லிக்குப்பத்தில் ரயில் பாதையை கடக்கும் போது ரயில் மோதியதில் விவசாயி இறந்தார்நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட்டை சேர்ந்தவர் ரவி,50; விவசாயி.இவர் நேற்று காலை பஸ் ஏறுவதற்காக அதே பகுதியில் உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மயிலாடுதுறையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரவி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இறந்த ரவிக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பத்மகுமார்,அனிதா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !