உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாத்துார் ஏரி உடைப்பு விவசாயிகள் கவலை

மாத்துார் ஏரி உடைப்பு விவசாயிகள் கவலை

விருத்தாசலம் மாத்துார் ஏரி உடைந்ததால், அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் நீரில் மூழ்கி, நெற்பயிர்கள் வீணாகி வருகின்றன.விருத்தாசலம் அடுத்த மாத்துார் கிராமத்தில் உள்ள அருணாச்சல பிள்ளை ஏரியின் மூலம் 500 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர்.கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஏரி முழு கொள்ளவை எட்டியது. கரை பலமின்றி இருந்ததால், ஏரியில் நேற்று உடைப்பு ஏற்பட்டது.இதனால், அப்பகுதி உள்ள விளைநிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. மேலும், கவனை, சித்தேரிக்குப்பம் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், உளுந்து வயல்களை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை