மேலும் செய்திகள்
மழையில் மூழ்கிய நெற்பயிர்கள்
01-Dec-2024
சேத்தியாத்தோப்பு: தொடர் மழை காரணமாக சேத்தியாத்தோப்பு பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட வேர்க்கடலை செடிகள் அழுகுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம், சின்னகுப்பம் ஆற்றுபடுகையொட்டிய நிலங்களில் 30 ஏக்கருக்கும் மேல் வேர்க்கடலை விதைத்துள்ளனர். அதே போல அணைவாரி மேட்டுத்தெரு மணல் பகுதிகளிலும் வேர்க்கடலை விதைக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை விதைத்து ஒரு வாரம் ஆகாத நிலையில் முளைப்பு எட்டியுள்ள செடிகள் நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி, அழுகி வருகின்றன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.அதே போல், சில இடங்களில் உளுந்து விதைத்துள்ள வயல்களிலிலும் மழை நீர் சூழ்ந்து செடிகள் அழுகி வருகின்றன.
01-Dec-2024