மேலும் செய்திகள்
பெண் மீது தாக்குதல் தாய், மகன் மீது வழக்கு
15-Aug-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் கூறினார். விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியா, 25; இவரது மனைவி அபர்ணா. இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனநிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்தாண்டு குடும்ப பிரச்னையில், சூரியா விஷம் குடித்து தற்கொலைக்கு மு யன்றார். அப்போது, சிகிச்சையளிக்கப்பட்டு, (ட்ரக்கியோஸ்டோமி) கழுத்தில் துளையிட்டு செயற்கை சுவாச குழாய் மூலம் சுவாசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது சூரியா தவறி விழுந்தார். அதில், அவரது சுவாசு குழாய் கருவி தவறி கீழே விழுந்ததில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார். தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக, சூரியா தந்தை தாமோதரன் அளித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15-Aug-2025