மேலும் செய்திகள்
மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்
22-Feb-2025
பெண்ணாடம்: பெண்ணாடம் மற்றும் நடுவீரப்பட்டில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக இரு வேன்களை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று இறையூரில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மூட்டை களில் மணல் கடத்தி வந்த டி.என். 10 - பி.ஏ. 0018 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வேனை பறிமுதல் செய்தனர். மேலும், வேனில் இருந்த, அரியலுார் மாவட்டம், அழகா புரம் மணிவேல், 28, இறையூர், அண்ணாநகர் சங்கர் மகன் பாரதிதாசன், 19, செல்வராஜ் மகன் குருராஜ், 22; ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய கொளஞ்சி மகன் மாதேஷ், செல்வம் மகன் சுதாகர் ஆகியோரை தேடி வருகின்றனர். நடுவீரப்பட்டு
சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் நேற்று காலை சிலம்பிநாதன் பேட்டையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மணல் கடத்தி வந்த பி.ஒய்.01 பிபி7444 பதிவெண் கொண்ட மகேந்திரா பிக்அப் வேனை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.மேலும், வேனை ஓட்டி வந்த திருக்கண்டேஸ்வரம் குமார், 42; பி.என்.பாளையம் திருநாவுக்கரசு, 48; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
22-Feb-2025