தெய்வீக பக்தர் பேரவை சார்பில் அன்னதானம்
சிதம்பரம்: தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, சிதம்பரம் கீழவீதி கோயில் வாயிலில், தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி ராதா தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது, மாநில துணைத்தலைவர்கள் சம்பந்தமூர்த்தி, செல்வகுமார், மாநில பொதுச் செயலாளர்கள் வேல்முருகன், ரகோத்தமன், பால்மணி, சூரிய பிரகாஷ், ஸ்ரீராம், செந்தில்ராஜா, ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.