உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நான்கு வழி சாலை பணி கன மழையால் பாதிப்பு

நான்கு வழி சாலை பணி கன மழையால் பாதிப்பு

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் பெய்த கன மழை காரணமாக நெடுஞ்சாலை பணிகள் பாதிக்கப்பட்டன. சிதம்பரம் பகுதியில் விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் கடலுாரில் இருந்து துவங்கும் சாலையில், காரைக்காடு முதல் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் வரை 80 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன. அதன் பின்பு ஆலப்பாக்கத்தில் இருந்து பு.முட்லுார் வரை பணிகள் முற்றிலும் முடிவடைந்து, தடையின்றி போக்குவரத்து துவங்கி நடந்து வருகிறது. இதில் பு.முட்லுார் மற்றும் சி.முட்லுாரில் மட்டும் பணிகளை துவக்க தாமதம் ஏற்பட்டது. பல்வேறு வழங்குகள் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து கடந்த மாதம் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தன.இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பணிகள் பாதிக்கப்பட்டன. அதில் சி.முட்லுார் பகுதியில் சாலை வேலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியது. அதனை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சாலை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை