உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூர் லட்சுமி மருத்துவமனையில் நாளை இலவச மருத்துவ முகாம்

வேப்பூர் லட்சுமி மருத்துவமனையில் நாளை இலவச மருத்துவ முகாம்

கடலுார் : வேப்பூர் சென்னை-திருச்சி மெயின் ரோட்டில் பச்சையம்மன் காம்ப்ளக்ஸில் புதிதாக துவங்கப்பட்டுள்ள லட்சுமி மருத்துவமனையில் நாளை 25ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில், லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை நிபுணர் கருணாகரன், மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவ நிபுணர் ஜெயலட்சுமி, மகப்பேறு டாக்டர் லாவண்யா, சித்தா டாக்டர் விஜயன், பொது மருத்துவர் கண்ணன் மற்றும் மருத்துவக் குழுவினர் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், ஹீமோகுளோபின் மற்றும் தேவைப்படுபவருக்கு இ.சி.ஜி., ஆகிய பரிசோதனைகள் இலவசமாக எடுக்கப்படும். முகாமிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் அறுவை சிகிச்சை மற்றும் குழந்தையின்மை மேல் சிகிச்சைக்கு 30 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். தேவைப்படுபவருக்கு இலவசமாக அல்ட்ரா ஸ்கேன் எடுக்கப்படும். பிரதி வாரம் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் அறுவை சிகிச்சை நிபுணர், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்து சிறப்பு மருத்துவ ஆலோசனைகள் வழங்குவர்.முகாமில், பங்கேற்கும் அனைவருக்கும் அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 78249 47070 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ