உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு இயன் முறை மருத்துவ முகாம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இயன் முறை மருத்துவ முகாம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி கல்வித் துறை மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் மாணவர்களுக்கான இயன் முறை மருத்துவ முகாம் நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். டி.இ.ஓ., பத்ரூ முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் கழுத்து, தண்டுவடம், கை, இடுப்பு, முழங்கால், தசை இறுக்கம் உள்ளிட்டவைகள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இயன்முறை டாக்டர் சந்திரமவுலீஸ்வரன் தலைமையில் 15 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மாணவர்களை பரிசோதனை செய்தனர்.யோகா டாக்டர் குமார், ஆசிரியர் பயிற்றுனர்கள் சுரேந்தர்சிங், ஏழுமலை, ஒருங்கிணைப்பாளர் ஜாய்ஸ், ராமர், புஷ்பலதா உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் உமாபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை