உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் பவுர்ணமி ஊர்வலம் துவக்கம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பவுர்ணமி ஊர்வலம் துவக்கம்

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று முதல் பவுர்ணமி ஊர்வலம் துவங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆர்வத்துடன் கோவிலை வலம் வந்து வழிபட்டனர்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று இரவு கிரிவலம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.கிரிவலத்தில் ஒவ்வொரு மாதமும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதனையொட்டி, பிரதான சிவாலயங்களில் பவுர்ணமி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, உலகின் மைய பூமியான சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோவிலில் நேற்று முதல் பவுர்ணமி ஊர்வலம் செல்ல, இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.அதனையேற்று நேற்று இரவு 8 மணியளவில், மழை பெய்த போதிலும், பக்தர்கள் பவுர்ணமி ஊர்வலம் செல்ல துவங்கினர். பக்தர்கள், நடராஜர் கோவில் மாட வீதியை மூன்று முறை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இனி மாதந்தோறும், திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல முடியாதவர்கள், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பவுர்ணமி ஊர்வலம் செல்லலாம். தில்லையில், அர்த்தசாம பூஜையில் சிவகணங்கள் அனைத்தும் ஓடுங்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாகவே, உலகில் உள்ள அனைத்து கோவில்களுக்கு பின்பு, சிதம்பரம் நடராஜருக்கு அர்த்தசாம பூஜை நடைபெறுகிறது. அந்த நேரத்தில் பவுர்ணமி ஊர்வலம் செல்வது சிறப்பு என ஆன்மீக குழுவினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி