உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா வாலிபர்கள் ரகளை இன்ஜினியர் மீது சரமாரி தாக்கு

கஞ்சா வாலிபர்கள் ரகளை இன்ஜினியர் மீது சரமாரி தாக்கு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கம்ப்யூரட்டர் இன்ஜி., தாக்கிய, கஞ்சா போதை ஆசாமிகள் ஐவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அடுத்த வாழைக்கொல்லை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் நிலவழகன், 47, இவர் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் சர்வீஸ் இன்ஜினியராக பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் இரவு பணி நிமித்தமாக கள்ளக்குறிச்சி சென்று விட்டு, விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு பஸ் ஏற வந்தார்.அப்போது அந்த பகுதியில் கஞ்சா போதையில் சுற்றித் திரிந்த விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் உள்ளிட்ட 5பேர், நிலவழகனை சரமாரியாக கட்டையால் தாக்கினர். இதில், படுகாயமடைந்த நிலவழகன் விருத்தாசலம் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 35 தையல் போடப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள அஸ்வின் உள்ளிட்ட 5பேரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி