மேலும் செய்திகள்
பைக் மோதி சிறுமி சாவு நடுவீரப்பட்டில் பரிதாபம்
23-Sep-2024
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கெடிலம் ஆறு பாலத்தின் அருகே குப்பைகளைக் கொட்டி எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.நடுவீரப்பட்டு - பாலுார் சாலையில் கெடிலம் ஆற்றில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளில் மழைக்காலங்களில் பன்றிகள், நாய்கள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், காய்ந்த குப்பைகளை எரிப்பதால் சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.எனவே, பாலத்தின் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23-Sep-2024