காஸ் சிலிண்டர் பதுக்கியவர் கைது
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் உரிமம் இன்றி ச மையல் காஸ் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் பகுதியில் உரிமம் இல்லாமல் சமையல் காஸ் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, திட்டமிட்ட குற்ற நுண்ணரிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் சென்றது. அதன்பேரில், தலைமை காவலர் ராஜசேகர், ஏட்டு மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர், விருத்தாசலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள காஸ் ஏஜென்சியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, உரிமம் இன்றி காஸ் ஏஜன்சி நடத்தி காஸ் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, விற்பனையாளர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த காவாளக்குடியைச் சேர்ந்த ஸ்டாலின், 29; என்பவரை கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்து 33 சிலிண்டர்களை பறிமுதல் செய்து, குடிமைபொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜாவிடம் ஒப்படைத்தனர்.