உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் வீனஸ் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில், குறுவட்ட விளையாட்டு போட்டி மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ரூபியால்ராணி தலைமை தாங்கினார். தலைமைக் கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் அறிவழகன் வரவேற்றார். பள்ளி தாளாளர் வீனஸ்குமார் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போனிகலா, உடற்கல்வி ஆசிரியர்கள் பிரபாகரன், அருண்பாண்டியன், உமா, எப்சிமேரி உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கட்டணத்தில் 20 சதவீதம், மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுவோருக்கு முழுக்கட்டண சலுகை அளிக்கப்படும் என தாளாளர் குமார் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ