உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஞானகுரு வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

ஞானகுரு வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

திட்டக்குடி, : திட்டக்குடி ஞானகுரு வித்யாலாயா பள்ளியில் 24ம் ஆண்டு விழா நடந்தது.பள்ளி நிறுவனர் கோடி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சிவகிருபா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அய்யாதுரை ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை கீர்த்திகா வரவேற்றார். திட்டக்குடி தாசில்தார் ஜெயந்தி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் மாணவர்கள் பரதம், யோகா, கராத்தே, அபாகஸ், நடனம், பட்டிமன்றம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாநில, மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாக அலுவலர் சித்ரா, ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை