உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பேரூராட்சியுடன் இணைத்து அரசாணை: அருண்மொழிதேவன் ஆட்சேபனை

பேரூராட்சியுடன் இணைத்து அரசாணை: அருண்மொழிதேவன் ஆட்சேபனை

விருத்தாசலம் : கங்கைகொண்டான் பேரூராட்சியுடன் பெரியாக்குறிச்சி ஊராட்சியை இணைத்த அரசாணையை திரும்ப பெறுமாறு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புவனகிரி தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான் பேரூராட்சியுடன் கம்மாபுரம் ஒன்றியம், பெரியாக்குறிச்சி ஊராட்சியை இணைக்க கடந்த மாதம் 31ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள், பொது மக்களிடம் கருத்து கேட்கவில்லை.கடந்த அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தியன்று, பெரியாக்குறிச்சி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், கங்கைகொண்டான் பேரூராட்சியுடன் இணைக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் உள்ள துணை கிராமங்களான எ.குறவன்குப்பம் மெயின்ரோடு, திருவேங்கடம் நகர், பெரியாகுறிச்சி ஆகிய கிராம மக்களின் கருத்துகளை கேட்காமல், விருப்பத்திற்கு மாறாக தி.மு.க., அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதனால் கிராம மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னிச்சையாக தி.மு.க., அரசு அரசாணை வெளியிட்டதை ஏற்க முடியாது என ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இது பெரியாகுறிச்சி ஊராட்சியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தையும், பதட்ட நிலையும் நிலவுவது வேதனைக்குறியது.பெரியாக்குறிச்சியில் பெரும் பகுதி விவசாய நிலங்கள் என்.எல்.சி., நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வறுமைக் கோட்டுக்கு கீழ் வசித்து வருகின்றனர். எனவ, அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ