உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரசு பள்ளியில் விளையாட்டு திடல் புனரமைப்பு தீவிரம்

 அரசு பள்ளியில் விளையாட்டு திடல் புனரமைப்பு தீவிரம்

நடுவீரப்பட்டு: அரசு மேல்நிலைப்பள்ளியில், ரூ.34 லட்சம் மதிப்பில், வாலிபால் விளையாட்டு திடல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்கள் விளையாடும் வாலிபால் விளையாட்டு திடலில் தரையில் கற்கள் அதிகளவில் உள்ளன. இதனால், மாணவர்கள் காலில் அடிக்கடி, காயம் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, மாணவர்கள் விளையாட்டு திடலை புனரமைக்க கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் மாணவர்கள் பாதுகாப்பாக விளையாட 34 லட்சம் ரூபாய் மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், சுற்றுப்பகுதியில் பாதுகாப்பு வலையுடன் கூடிய வாலிபால் விளையாட்டு திடல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ