உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஹிந்தி பிரசார சபா சார்பில் பட்டமளிப்பு

ஹிந்தி பிரசார சபா சார்பில் பட்டமளிப்பு

கடலுார்: தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபாவின் தமிழ்நாடு கிளையில் பயின்று விஷாரத் மற்றும் பிரவீண் பட்டம் பெற்றவர்களுக்கு, கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. சபாவின் முதல் தலைவர் வழக்கறிஞர் அருணாசலம் தலைமை தாங்கினார். சபாவின் செயற்குழு உறுப்பினர் உமாசுதன் வரவேற்றார். கிருஷ்ணசாமி கல்விக்குழும தலைவர் ராஜேந்திரன், ரோட்டரி இன்னர்வீல் சங்க முன்னாள் சேர்மன் எமில்டா ஜோ, ரோட்டரி மண்டல உதவி ஆளுநர் ஜெய்சங்கர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபாவில் பயின்று விஷாரத், பிரவீண் பட்டம் பெற்றவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் துரைசாமி, உமா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை