உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குருஞானசம்பந்தர் பள்ளி ஆண்டு விழா

குருஞானசம்பந்தர் பள்ளி ஆண்டு விழா

சிதம்பரம், : சிதம்பரம் குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி செயல் தலைவர் சுவேதகுமார் தலைமை தாங்கினார். முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் தர்பாரண்யன் முன்னிலை வகித்தார். செயலர் சேதுசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார்.பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சிவானந்தவல்லி, செந்தில்வேலன், அருண், கமல்சந்த் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.முன்னாள் துணைவேந்தர் பஞ்சநதம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். துணை முதல்வர் ராஜேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ஆசிரியர் ஸ்ரீதரன் நன்றி கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை