உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அண்ணா விளையாட்டரங்கில் ஹாக்கி ஆண்டு விழா

 அண்ணா விளையாட்டரங்கில் ஹாக்கி ஆண்டு விழா

கடலுார்: கடலுாரில் ஹாக்கி அகாடமி மற்றும் மாவட்ட ஹாக்கி விளையாட்டு கழகம் சார்பில், 100வது ஹாக்கி விளையாட்டு ஆண்டு விழா நடந்தது. இதையொட்டி, கின்னஸ் சாதனை பெற இந்தியா முழுவதும், 500 மாவட்டங்களில், 1000 போட்டிகள் நடைபெற்றன. அதில் கடலுாரில் இருந்து ஆண், பெண் 4 அணிகள் மோதின. பின்னர், கடலுார் செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளியின், நசியான் கிரகோரி போட்டியினை துவக்கி வைத்தார். பரிசளிப்பு விழாவில் கடலுார் ஹாக்கி அகாடமி பொதுச்செயலாளர் கருணாகரன் வரவேற்றார். மஞ்சகுப்பம் ஸ்டேட் பேங்க் வங்கியின் முதன்மை மேலாளர் பரணிதரன் தலைமை தாங்கி பரிசு வழங்கினார். சர்வீஸ் கமிஷன் பயிற்சி பள்ளியின் நிறுவனர் முல்லை ராஜன், ஹாக்கி குழு தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். ஹாக்கி அகாடமியின் பொருளாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார். ராஜேந்திரன் மற்றும் ஞானசேகரன் மாவட்ட விளையாட்டு ஆக்கி விளையாட்டு கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கருணாகரன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி