உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் கசிவால் வீடு எரிந்து சேதம்

மின் கசிவால் வீடு எரிந்து சேதம்

புவனகிரி: புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் இரட்டைக் குளம் தெருவை சேர்ந்தவர் ராஜ்,55; கூலித்தொழிலாளி. நேற்று மாலை 5.00 மணியளவில் மின் கசிவு காரணமாக அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலின்பேரில், சிதம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து, அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.புவனகிரி போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி