மேலும் செய்திகள்
டாஸ்மாக் மது விற்ற பெண் கைது
29-May-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.கருவேப்பிலங்குறிச்சி அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்,40; இவரது மனைவி ஈஸ்வரி. வெளிநாட்டில் பணிபுரிந்த செல்வகுமார் கடந்த மூன்று நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். அப்போது ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த அவர், மாமனார் தில்லைகோவிந்தன், மாமியார் கலைச்செல்வி, மனைவி ஈஸ்வரி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில், காயமடைந்த தில்லை கோவிந்தன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, செல்வக்குமாரை கைது செய்தனர்.
29-May-2025