| ADDED : பிப் 19, 2024 05:47 AM
கடலுார்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டுமென, மாவட்ட செயலாளர் சம்பத் பேசினார். கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலுார் கட்சி அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். மாநில மீனவரணி தங்கமணி, ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சம்பத் பேசுகையில், 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளான வரும் 24ம் தேதி கடலுார், பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் சிறப்பாக கொண்டாடி, நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.நெய்வேலிக்கு 22ம் தேதி, வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு 5,000 பேருடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் கடலுார், பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதியில் அதிக ஓட்டுகள் பெற வேண்டும்' என்றார்.கூட்டத்தில், மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வம், பகுதி செயலாளர்கள் மாதவன், கந்தன், வெங்கட்ராமன், வர்த்தக பிரிவு வரதராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.