ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்நோக்கு மற்றும் மகப்பேறு மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. அமைச்சர் கணேசன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தனர். எம்.பி., விஷ்ணுபிரசாத், வர்த்தகர் சங்க மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மண்டல தலைவர் சண்முகம், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், நேஷனல் எஸ்டேட் நாகூர் கணி, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், டாக்டர் கோவிந்தசாமி, கழுதுார் வெங்கடேஸ்வரா கல்வி குழும தலைவர் வெங்கடேசன், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் குத்து விளக்கேற்றினர். நகர வர்த்தகர் சங்க தலைவர் கோபு - ராஜலட்சுமி, டாக்டர்கள் விக்னேஷ் கோபு - சவுமியா வரவேற்றனர். விழாவில், தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், நகர துணை செயலர்கள் ராமு, நம்பிராஜன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், வர்த்தகர் சங்க மாவட்ட செயலாளர் ரவி, பொருளாளர் தமிழ்வாணன், நகர செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகம்மது, மாநில துணை தலைவர் பழமலை, முன்னாள் தலைவர் சண்முகம், ஓட்டல் சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் சதீஷ், பொருளாளர் முத்துசாமி, இளைஞரணி நிஷாந்த், பிரபு, வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.