உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய வழித்தடத்தில் பஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதிய வழித்தடத்தில் பஸ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பண்ருட்டி :பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுார்- கடலுார் இடையே புதிய வழித்தடத்தில் பஸ்சை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பண்ருட்டி அருகே காட்டுக்கூடலுாரில் நடந்த நிகழ்ச்சியில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் பஸ்சை துவக்கி வைத்தார். இந்த பஸ் காட்டுக்கூடலூரில் இருந்து முத்தாண்டிக்குப்பம், கொள்ளுகாரன் குட்டை, சத்திரம் வழியாக கடலுார் செல்கிறது.நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், கடலூர் அரசு போக்குவரத்து கழக. பொதுமேலாளர் ராஜா, வணிக அலுவலர் ரகுராமன், பரிமளம், கிளை மேலாளர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆடலரசு, ஒன்றிய கவுன்சிலர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை