தி.மு.க., மாணவர் அணி பதவிகளுக்கு நேர்காணல்
கடலுார் : கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணிக்கு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு நேர்காணல் கடலுார் தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணியில் மாநகர, ஒன்றிய, நகர ,பகுதி, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு நேர்காணல், நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் பன்னீர்செல்வம், மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., நேர்காணலை நடத்தினர். அவர்களுடன் அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.இதில், மாவட்ட தி.மு.க., மாணவர் அணிக்கு மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொண்டனர்.