உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சரஸ்வதி வித்யாலயா மாணவிக்கு பாராட்டு

சரஸ்வதி வித்யாலயா மாணவிக்கு பாராட்டு

கடலுார்; கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹேனா,9, நான்காம் வகுப்பு படிக்கிறார். இவர் கொடைக்கானலில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் 9 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்று இரண்டு போட்டிகளிலும் முதலிடம் வென்று கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல்அலுவலர் லட்சுமி சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர். பள்ளி முதல்வர் உதயகுமார், ஒருங்கிணைப்பாளர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை