உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நடுகாட்டு அம்மனுக்கு 31ம் தேதி கும்பாபிேஷகம்

நடுகாட்டு அம்மனுக்கு 31ம் தேதி கும்பாபிேஷகம்

விருத்தாசலம்; பெரியவடவாடி நடுகாட்டு அம்மன் கோவிலில் 31ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் உள்ள நடுகாட்டு அம்மன், விநாயகர், முருகன், வீரன், சப்தகன்னிகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வரும் 31ம் தேதி கும்பாபி ேஷகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு வரும் 30ம் தேதி மதியம் 3:00 மணிக்கு மேல், கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், மகா தீபாராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக 31ம் தேதி காலை 6:00 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம், வேதிகா அர்ச்சனை, 7:30 மணிக்கு மேல், 8:50 மணிக்குள் கலசங்கள் புறப்பாடுடன், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி