மேலும் செய்திகள்
லட்சுமி சோரடியா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
14-Feb-2025
கடலுார்; கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். கடலுார் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா ஆண்டறிக்கை வாசித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா குத்துவிளக்கேற்றினார்.சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.விழாவில், ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளி தாளாளர் அசோக்மல் சோரடியா, ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி சோரடியா, தி.மு.க., பகுதி செயலாளர் சலீம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் பாத்தாகான் வாழ்த்திப் பேசினார்.ஒருங்கிணைப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.
14-Feb-2025