உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோரடியா பள்ளி செஸ் போட்டியில் வெற்றி 

லட்சுமி சோரடியா பள்ளி செஸ் போட்டியில் வெற்றி 

கடலுார்; கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவிகள் மாநில அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றனர். விருத்தாசலத்தில் மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில், கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவிகள் காரூண்யா முதலிடம், ஷர்மி இரண்டாமிடம், சுருதி நான்காமிடம் பிடித்தனர். இவர்களை பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் சந்தோஷ்மல் சோரடியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். ராகவேந்திர செஸ் அகாடமி தலைவர் பாஸ்கர் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி