உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்கலம்பேட்டை பேரூராட்சியில் எல்.இ.டி., விளக்கு பொருத்தும் பணி

மங்கலம்பேட்டை பேரூராட்சியில் எல்.இ.டி., விளக்கு பொருத்தும் பணி

விருத்தாசலம், : மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் மாநில நகர்புற திட்டத்தின் கீழ், ரூ.22.13 லட்சம் மதிப்பில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி நடந்தது.இந்த பணியை, பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். செயல் அலுவலர் மயில்வாகனன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் உமரே பாரூக் நசீமா பானு, நுாருல்லா, முஜிபுர் ரஹ்மான், மகாலட்சுமி தீபா, கிருஷ்ணவேணி, இளநிலை உதவியாளர் துரை ரங்க ராமானுஜம், துப்புரவு மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ், குடிநீர் திட்ட பணியாளர் கோவிந்தராஜூலு உட்பட பலர் பங்கேற்றனர்.பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 376 எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை