உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்ட நிர்வாகம் சார்பில் கடன் வழங்கும் முகாம்

மாவட்ட நிர்வாகம் சார்பில் கடன் வழங்கும் முகாம்

கடலுார்: கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடன் வழங்கும் முகாம் நடந்தது.கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி மற்றும் திருப்பாதிரிப்புலியூரில் நடந்த முகாமில் அனைத்து வங்கிகளும் பங்கேற்று 50 கோடி ரூபாய்க்கு கடன் வழங்கியது. இந்தியன் வங்கி அதிக பயனாளிகளுக்கு கடன் வழங்கியது. மாவட்டத்தில் 7 கிளைகளை கொண்ட பரோடா வங்கி 128 பயனாளிகளுக்கு 6.40 கோடி ரூபாய் கடன் வழங்கியது. முகாமில், மகளிர் சுய உதவிக்குழு கடன், கல்விக் கடன், வாழ்ந்து காட்டுவோம் திட்டக் கடன், மீனவர்களுக்கான கடன் என பல்வேறு வகை கடன்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை