மேலும் செய்திகள்
இன்று சந்திர கிரஹணம் அவிநாசி கோவில் நடையடைப்பு
07-Sep-2025
விருத்தாசலம்: சந்திர கிரகணத்தையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் நடை சாற்றியும், இரவு பூஜைகளையும் நிறுத்தி நிவர்த்தி பூஜைகள் செய்யப்பட்டது. சந்திர கிரகணம் நேற்று இரவு 9:56 மணிக்கு துவங்கி, நள்ளிரவு 1:52 மணிக்கு முடிந்தது. இதையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று பிற்பகல் 12:00 மணிக்கு நடைபெறும் உச்சிகால பூஜை, பகல் 11:00 மணிக்கு நடந்தது. மாலை நடைபெறும் சாயரட்சை பூஜை, பிற்பகல் 2:00 மணிக்கு நடத்தப்பட்டது. மேலும், சாயரட்சை பூஜைகள் நிறுத்தப்பட்டு, இன்று காலை 6:00 மணிக்கு மேல், மணிமுக்தாற்றில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரியுடன் நிவர்த்தி பூஜைகள் செய்யப்பட்டு, வழக்கம்போல கோவிலில் பூஜைகள் துவங்கப்பட உள்ளது. பக்தர்கள் நலன் கருதி கிரகணத்தை முன்னிட்டு நடை சாற்றப்படவில்லை. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், சித்தி விநாயகர், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, மாலை 6:30 மணிக்கு நடை சாற்றப்பட்டது. இன்று காலை நிவர்த்தி பூஜைகளுடன் நடை திறக்கப்படுகிறது.
07-Sep-2025