உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., மாவட்ட செயற்குழு

மா.கம்யூ., மாவட்ட செயற்குழு

கடலுார்: கடலுாரில் மா.கம்யூ., மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர் மாதவன், மா நில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், கருப்பையன், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் பேசினர். கூட்டத்தில், தேன்மொழி, பிரகாஷ், வாஞ்சிநாதன், அமர்நாத் உட்பட பலர் பங்கேற்றனர். கடலுார் மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட நெல், கம்பு, மரவள்ளி, மணிலா, மக்காச்சோளம் பூச்செடிகள் உள்ளிட்ட பயிர்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நிவாரண வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை கைவிட வேண்டும். கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லுாரியை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் 25 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை