மேலும் செய்திகள்
மா.கம்யூ., மாவட்ட குழு கூட்டம்
25-Nov-2024
கடலுார்: கடலுாரில் மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தண்டபாணி, நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் ஸ்டீபன் ராஜ், போக்குவரத்து அரங்க செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு ரமேஷ்பாபு கண்டன உரையாற்றினர்.சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதை கண்டித்தும், ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், ராஜேஷ் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆளவந்தார், பக்கீரான், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
25-Nov-2024